
Aim at Excellence
உன்னதத்தை நோக்கிய உயர்குறிக்கோள்
Producing good citizens with better knowledge, skills and attitudes according to the changes in the world with nobles goals, better personality and commitment.
சிறந்த அறிவு, மனப்பாங்கு உலக மாற்றத்திற்கு ஏற்ப உயர் குறிக்கோளும் சிறந்த ஆளுமையும் அர்ப்பணிப்பும் கொண்ட உன்னத பிரஜைகளை உருவாக்குதல்.
Producing good citizens who will respect human values, face the challenges of the world with Self – confidence, maintain the religious, social and cultural customs, developing physically and mentally to fit.
மனித விழுமியங்களை மதித்து மாறிவரும் உலக சவால்களுக்கு தற்துணிவுடன் முகம்கொடுத்து சமய கலாசார பண்பாடுகளைப் பேணி உடல், உள விருத்தி பெற்று சமூகத்துடன் பொருந்தி வாழும் வகையிலான நற்பிரஜைகளை உருவாக்குதல்.
ஆனந்தமான சிவானந்தசாலை
அன்புடன் வாழ்த்தி வணங்குதுமே
தானமறங்கலை ஞானமுயர்க
சாதனவாழ்வு தலை நிமிர்க
மானமுயர்ந்து நம் மாணவர்கள்தாம்
வானமுயர்ந்து புகழ் பெறுக
இராமகிருஷ்ண மணிமொழி வழியே
சகல மதம் புகல் ஒன்றினையே
பராவி வளரும் நம் பல்கலை நிலையே
பாரினில் ஓங்கிட வாழியவே
வாழ்க! வாழ்க! பாரினில் ஓங்கிட வாழியவே!
(பண்டிதர் வீ. சி. கந்தையா)
Where the mind is without fear
And the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms
Towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever widening thought and action
Into the heaven of freedom
My father let my country awake.
(Rabindranath Tagore)
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி!
வாழிய வாழியவே!
வான மலந்தனைத்தும் அளந்திடும்
வன்மொழி வாழியவே!
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லையகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே!
வானமறிந் தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழியவே!
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர்மலர்த் தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டளி சேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளி சேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
(சுவாமி விபுலானந்தர்)