தரம் -5 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சைக்கான செயலமர்வு.

2020-09-17


2020ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மட் / சிவானந்த தேசிய பாடசாலையில் இன்று (2020.09.17) காலை 8மணிக்கு நடைபெற்றது.

மட்/சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்/விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக மட்/சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இக் கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது.

இக் கருத்தரங்கினை G.N.N.Promo.com(Gunam- கனடா) நிறுவனத்தின் நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி சங்கம்( EDS) அமுல்படுத்துகின்றது.

குறித்த கருத்தரங்கில் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் யசோதரன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க(EDS) ஸ்தாபகர் திரு.S.தேவசிங்கன் மற்றும் பாடசாலை உப அதிபர்கள், சிவானந்தா பாடசாலை ஆசிரியர்கள், விவேகானந்தா பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த விசேட கருத்தரங்கின் வளவாளராக திரு.K.I.ஞானரெட்னம் அவர்கள் பங்குபெற்றினார்.

இந்த கருத்தரங்கின் ஆரம்பத்தில் சிவானந்தா பாடசாலை அதிபர் உரையாரும் பொது பாடசாலை மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு செயற்படும் பாடசாலை பழைய மாணவர்களுக்கும், கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு மட்/சிவானந்த பாடசாலை மற்றும் மட்/விவேகானந்தா பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வாழ்த்துக்களையும் ஆசியையும் வழங்கினார்.

BT / Shivananda Vidyalaya National School
Kallady Uppodai, Batticaloa
shivanandavid@gmail.com
0652222379, 0652226352
Shivananda Vidyalaya © All rights reserved. Sponsored by Sivam Velupillai (Kallady Uppodai / Canada)
Design & developed by NSystemNetworks