HISTORY

இன்று எமது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 91 வருடங்கள் !!

சிவானந்த வித்தியாலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

கன்னல் தமிழ் கொஞ்சிக்குலவ வயல்களில் செந்நெல் விளைந்து குலுங்க, பாடுமீன்கள் இசைக்க மாண்புறு பெருமக்கள் மங்காப் புகழோடு வாழ்ந்த மட்டுமாநகரின் தென்கோடியிலே ஆன்மீகச் சுழலும், அழகுச் சுழலும், அறிவுச் சுழலும் ஒருங்கே அமைந்த கல்லடி-உப்போடைப் பிரதேசத்திலே திக்கெட்டும் புகழ் பரப்பி வரும் பாடசாலையாக சீர்புகழும் சிவானந்த வித்தியாலயம் விளங்குகின்றதெனில் மிகையாகாது. இச்சிவானந்த வித்தியாலயம் உருவாக்கப்பட்டு எழுபத்தைந்து வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் பவளவிழாக் காண்கிறது.

ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பில் நகர்புறங்களிலேயே கல்லூரிகள் நிறுவப்பட்டு கல்வியறிவு புகட்டப்பட்டிருந்த காலத்தில் படகுத்துறை மூலம் மட்டக்களப்பு வாவியைக் கடந்து சென்று ஆங்கில மொழி மூலம் கல்வியை எமது பகுதியல் வாழ்ந்த ஒரு சில தனவந்தர்களின் பிள்ளைகள் மாத்திரம் கற்றார்கள். கல்விப் பணியையும் சமூகத்தின் தேவையையும் உணர்ந்த கொடை வள்ளல் ஆன திரு.கந்தப்பெருமாள் கதிர்காமத்தம்பி உடையார் அவர்களும், திரு.தோ.கு.சபாபதிப்பிள்ளை உடையார் அவர்களும் 1909ம் ஆண்டு கல்லடி-உப்போடையிலே சுவாமி விவேகானந்தரின் சீடர்களில் ஒருவரான சகோதரி அவகாமி அம்மையாரை அடிக்கல் நட்டு ஒரு தமிழ்க்கலவன் பாடசலையை நிறுவினர். அதன் பின்னர் இவர்களின் உள்ளத்தில் ஒர் ஆங்கிலப் பாடசாலையை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் உதித்தது. ஆங்கில மொழி மூலம் கல்வியை இப்பகுதியில் வாழும் அணைத்துப் பிள்ளைகளும் கற்கவேண்டும் என்னும் அவாவினால் இவ்வள்ளல் பெருமக்கள் இருவரும் ரூபா 5000த்தை ஆண்டு அறக்கொடையாக நிதியாக இட்டு வைத்தனர். இந்நிதியைக் கொண்டு இப்பகுதியில் ஓர் ஆங்கிலப் பாடசாலை உருவாக்க வேண்டுமென ஆன திரு.கந்தப்பெருமாள் கதிர்காமத்தம்பி உடையார் அவர்களும், திரு.தோ.கு.சபாபதிப்பிள்ளை உடையார் அவர்களும் தம் புத்திரர்களான திரு.க.உ.வேலுப்பிள்ளை, திரு.எஸ்.ஓ.இரத்தினசிங்கம் ஆகியோரிடம் கூறிவிட்டு சென்றனர். பின்னர் அவர்களின் புத்திரரான திரு.க.உ.வேலுப்பிள்ளை அவர்களும், திரு.தோ.கு.சபாபதிப்பிள்ளை உடையார் அவர்களின் புதல்வாரன திரு.எஸ்.ஓ.இரத்தினசிங்கம் அவர்களும் இந்நிதியை பாதுகாத்து வந்தனர்.

இவ்வள்ளல் பெருமக்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வந்தது. 1925ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் அவர்கள் சந்யாசியாக ஆகிவிட்டு மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேளையில் அவர் கல்வி மறுமலர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்குடன் இருந்தார். அவ்வேளை திரு.க.உ.வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் தமிழ்கலவன் பாடசாலை நிர்வாக குழுவும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் மட்டக்களப்பு நகருக்குச் சென்று சுவாமிஜீ அவர்களை சந்தித்து தமது பிரதேசத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அவ்வேண்டுகோளை சுவாமிஜீ அவர்கள் ஏற்றுக்கொண்டார். திரு.க.உ.வேலுப்பிள்ளை அவர்கள் தமது இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியிலே கல்லடித்துறையிலிருந்து அழைத்து வந்தார். சுவாமஜீக்கு கல்லடி, கல்லடி உப்போடை, நொச்சிமுனை வாழ் மக்களினால் பிரமாண்டமாக வரவேற்பு நடாத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு.க.உ.வேலுப்பிள்ளை தமது தந்தையாரின் எண்ணக்கருத்தை முன் வைத்து இப்பகுதிலேயே ஒரு ஆங்கில பாடசாலை அமைக்க தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாக கூறினார். சுவாமி விபுலானந்த அடிகளுக்கு கல்லடி-உப்போடையின் இயற்கை சுழல் கல்வி கற்பதற்கு உகந்த சுழலாக தென்பட்டதாலும் சுவாமிஜீ அவர்கள் கல்வி மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்னும் தாக உணர்வுடன் இருந்தமையாலும் அவரும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

அத்தோடு திரு.க.உ.வேலுப்பிள்ளை அவர்கள் பாடசாலை கட்டுவதற்காக தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை வழங்கியதோடு அறக்கொடையான நிதியாக 5000த்தையும் வழங்கினார். சுpவானந்த வித்தியாலயத்திற்கான அடிக்கல் 26.11.1925ம் திகதி அன்று சுவாமி விபுலானந்தர் அவர்களினால் நடப்பட்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 15.04.1929ம் திகதி அன்று பூர்வாங்க கிரியைகளுடன் சமய அனுட்டானப்படி சவாமி விபுலானந்தர் இப்பாடசலையை ஆரம்பித்தார். அவர் இப்பாடசாலைக்கு தமது தீட்சா குருவான சிவானந்தரின் பெயரை சூட்டும் நோக்குடன் சிவானந்த வித்தியாலயம் என்னும் நாமத்தை சூட்டியதோடு, இப்பாடசாலை உருவாக வேண்டும் எண்ணம் கொண்டு விண்ணுலகை ஏய்திய திரு.கந்தப்பெருமாள் கதிர்காமத்தம்பி உடையார், திரு.சபாபதிப்பிள்ளையார் உடையார் ஆகியோரின் படங்களை தமது திருக்கைகளினாலே கட்டிடத்தினுள் பதித்தார். 22.04.1929ம் திகதி அக்கால கிழக்கு மாகாண அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு.ஹரிசன் ஜோன்சன் அவர்களால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 24.04.1929ம் திகதி அன்று திரு.க.உ.வேலுப்பிள்ளை அவர்கள் கட்டிடம், நிலம், தளபாடம் அடங்கிய நன்கொடைகளை சுவாமி விபுலானந்தரிடம் சாசனம் மூலமாக கையளித்தார். சாசன இல 2809

பாடசாலை சுவாமி விபுலானந்தர் வசம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் அரசினர் அங்கீகாரம் உடனடியாக கிடைக்கவில்லை. தொடர்ந்தும் இதனை பராமரிக்கும் பொறுப்பு அவ்வூரவரிடமே விடப்பட்டது. இதற்கு பொறுப்பாக 5 பேரை கொண்ட ஒரு நிர்வாகசபை இயங்கியது. இச்சபையிலே திருவாளர்.க.உ.வேலுப்பிள்ளை, நொ.சீ.செல்லத்துறை, நா.சீனித்தம்பி, நொ.க.நல்லதம்பி, தோ.சந்திரசேகரம், ச.உ.இரத்தினசிங்கம் ஆகியோர் கடமையாற்றினர். க.உ.வேலுப்பிள்ளை அவர்கள் பொருளாளராக கடமையாற்றினார். இச்சபையினர் போதிய நிதியுதவியை அளித்ததுடன் பாடசாலைக்கு மணவர்களை வரும் படி ஊக்கப்படுத்தியும், சங்கத் துறவிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தும், ஊக்கமளித்தனர்.

இவர்களது விடாமுயற்சியிலும் இப்பாடசாலை வளர்ச்சியடையத் தொடங்கியது. அது சிவானந்த வித்தியாலய வளர்ச்சியிலே குறிப்பிடத்தக்க கட்டமாகும்.

01.05.1929ம் திகதி முறையான வகுப்புகள் 27 மாணவர்களுடன் ஆரம்பமாகியது. முதல்நாள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் கல்லடி-உப்போடையை சேர்ந்த திரு.அ.பஞ்சாட்சரம் (அமரர்) முதல் மாணவனாகவும், திரு.எம்.ஐ.எம்.அப்துல்சலாம் இரண்டாவது மாணவனாகவும் (அமரர்), திரு.க.உ.வே.நமசிவாயம் மூன்றாவது மாணவனாகவும், திரு.எம்.ஏ.அப்துல்ஜீத் நான்கவாது மாணவனாகவும், திரு.கே.ஓ.வி.கதிர்காமதம்பி ஐந்தாவது மாணவனாகவும் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி அவர்கள் தமிழ், முஸ்லிம் மாணவர் உறவை மிகவும் நெருக்கம் ஆக்கினார் என்பதை இம்மாணவர்களை அனுமதித்த அனுமதி முறை எமக்கு காட்டி நிக்கின்றது. இந்நிலையில் 1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீ இராமகிஸ்ண மிசனால் வண்ணார் பண்ணை வெள்ளிக்கிழமை மடத்தில் இருந்து வைத்தீஸ்வரர் வித்தியாலத்தில் கல்வி கற்ற 07 மாணவர்கள் அழைத்து வரப்பட்டு சிவானந்த வித்தியாலத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர்தான் காலம் சென்ற சங்கீத பூசனம் குழந்தைவேல் அவர்களாவார்.

மட்ஃசிவானந்த வித்தியாலயத்தின் முதலாவது வளர்ச்சிக் கட்டிடத்தை (1929-1938) எடுத்து நோக்குவோம் ஆனால் சுவாமி அவிநாசானந்தா அவர்களை முகாமையாளராகவும், திரு.ஏ.பாலசுப்பிரமணியம (திருகோணமலை) என்பவரை அதிபராகவும் கொண்டு இயங்கத்தொடங்கியது. முதலாவது ஆசிரியர் குழுவில் நாராயணநாயர், திரு.மு.கந்தசாமி, திரு.இராமச்சந்திரா, திரு.சண்முகம், திரு.மேனன், திரு.கதிரவேற்பிள்ளை, திரு.வி.முருகுப்பிள்ளை, திரு.சந்திரசேகரப்பிள்ளை ஆகியோர் இடம்பெற்றனர். வண்ணார் பண்ணையிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்களும், ஏனைய மாணவர்களும், ஆசிரியர்களும் தங்குவதற்காக திரு.கே.ஓ.வேலுப்பிள்ளை அவர்கள் தமக்கு சொந்தமான ராஜ்மாகால் இல்லத்தை தற்காலிகமாக தங்குவதற்கான விடுதியாக கொடுத்தார். ஆரம்ப காலத்தில் சுவாமி விபுலானந்தர் அவர்களும் இங்கேயே வாழ்ந்தார்.

12.07.1929ம் திகதி இலங்கை சங்கம் அரச அங்கீகாரம் பெற்றது. 01.04.1931ம் திகதி பாடசாலையில் நடைபெற்ற மதிப்பீட்டை தொடர்ந்து ஸ்ரீ சங்கத்தின் அரச நன்கொடை பெறும் பாடசாலையாக மட்ஃசிவானந்தா வித்தியாலயம் பதிவு செய்யப்பட்டது. 1931ம் ஆண்டு அரசாங்க உதவி பெறும் பாடசாலையாக ஆக்கப்பட்;;டதோடு பாடசாலை முகாமைத்ததுவத்திற்கு அரசாங்கத்தில் இருந்து மானியமும் கிடைக்கப் தொடங்கியது. பாடசாலையை பராமரிப்பு செய்ய ஒரு பகுதிநிதி அரசாங்கத்திலிருந்து கிடைக்கப் பெற்றபோதிலும் இந்நிதி போதாமையினால் மாணவர்களிடம் கட்டணம் அறவிடப்பட்டதோடு ஊர்மக்களிடம் இருந்து நிதி உதவி பெறப்பட்டது.

இலங்கை மி~னின் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக சுவாமி சிவானந்தரால் பணிக்கப்பட்ட ஸ்ரீ பரமஹம்சரது நேரடி சீடர்களில் ஒருவரான சுவாமி விஞ்ஞானானந்த சுவாமிஜீ மகாராஜ் அவர்கள் 27.12.1933ம் திகதி மட்;ஃசிவானந்த வித்தியாலயத்திற்கு வருகை தந்து பாடசாலை கட்டிடத்திற்கு முன்னால் நின்று ;” புசழற புசழற புசழற றுநடட ” எனக்கூறி ஆசிர்வதித்து சென்றது பெரும் பாக்கியம் ஆகும். சுவாமி விஞ்ஞானானந்த சுவாமிஜீ அவர்களின் வருகையிக் ஞாபகார்த்தமாக திரு.அம்பலவாணர் அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலமாகிய 1937ல் சுவாமி விஞ்ஞானானந்த சுவாமிஜீ ஆய்வுகூடம் நிறுவப்பட்டது.

1936ல் ஆண்டு சிவபுரிக்கு அருகாமையில் மரப்பலகையினால் “சித்தர் கூடம்” என சுவாமி அவர்களினால் அழைக்கப்பட்ட விடுதி துறவிகள் தங்கும் இடமாக தற்காலிகமாக காணப்பட்டது. “சிவபுரி” ஆரம்பிக்கப்பட்டதும் சுவாமிகள் அங்கு இடம் பெயர்ந்து சென்றார்கள். சித்திரகூடம் விடுதி மாணவர்களின் சாப்பாட்டு அறையாக மாற்றப்பட்டது. விடுதி மாணவர்கள் இலங்கையின் பல இடங்களிலும் உள்ள எல்லா இனத்தையும் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். ஓவ்வோரு மாணவர்களும் ஒவ்வோரு காலையிலும் தியானம் செய்யவும், ஜெபம் செய்யவும் ஒன்றுகூடினர்.

31.01.31937இல் விஞ்ஞானானந்த ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு ஜெயந்தி நூற்றாண்டு ஞாபகார்த்தமாக சேர்.கந்தையா வைத்தியநாதன் அவர்களால் இரண்டு வகுப்பறைகள் 07.02.1937 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன. இவ்வாண்டு பகவான் ஸ்ரீ இராமகிரு~;ண பூசை அறை அமைக்கப்பட்து. மாணவர் விடுதி இருந்த நிலப்பிரதேசத்திற்குள் இது அமைக்கப்பட்டது.

சிவானந்த வித்தியாலயத்தின் தாபகரும் முதலாவது விடுதிப் பொறுப்பாளருமான சுவாமி விபுலானந்தர் அவர்கள் இந்தியாவிலுள்ள மாயாவதி என்னும் இடத்திற்கு 1939இல் சென்று “பிரபுத்தபாரதம்” என்னும் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றினார். சுவாமி விபுலானந்தர் அவர்கள் அதிபராக இருந்து இந்தியா சென்றவேளை திரு.எஸ்.அம்பலவானர் அவர்கள் அதிபர் பதவியை பொறுப்பேற்றார். .இவர் சுவாமிகள் இருக்கும்போதே ஆசிரியராக இப்பாடசாலையில் கடமையாற்றியவர் ஆவார். இவர் 1937-1954 வரை மிக நீண்டகாலம் அதிபர் பதவியை வகித்தார். இவருடைய காலத்தில் பாடசாலை குறிப்பிடத்தக்கவகையில்பல கோணங்களிலும் வளர்ச்சிகண்டமை பாரட்டத்தக்கதாகும். இவரது சாதனைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன. இவரின் இடமாற்றத்தை எதிர்த்து பாடசாலை மாணவர்கள் அணைவரும் கண்டனப் பேரணி ஒன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் பின்னர் திரு.எம்.ரகுபதி அவர்கள் 01.05.1954 - 31.08.1955 வரை நியமிக்கப்பட்டார். சுவாமி “நி~;கமாநந்தர்” இராமகி~ன் பாடசாலைகளின் முகாமையாளரானார். சுவாமிஜ நி~;கமாநந்தர் இவ்வித்தியாலயத்தின் விடுதி, சிவபுரி ஆகிய அணைத்தையும் ஸ்திரப்படுத்துவதிலும் மறுசீரமைப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தினார். மாணவர்களின் விருப்பிற்குரியவராகவும் இவர் காணப்பட்டார். 1939ம் ஆண்டு இப்பாடசாலை மின்சார வசதியையும் வானோலி வசதியையும் பெற்றுக்கொண்டது.

1941ல் திருகே.கணபதிப்பிள்ளை (போடியார்) அவர்களின் அன்பளிப்பான “இரத்தினாலயம்” என்னும் விடுதிக் கட்டிடம் இப்பாடசாலைக்கு கட்டி வழங்கப்பட்டது. .இவ்விடுதி 1941ல் கட்டணம் செலுத்ததும் மாணவர்களுக்கான விடுதியாக திறந்து வைக்கப்பட்டது. 1941ல் “ஆச்சாரியமந்தீர்“ என்னும் அதிபருக்குரிய தங்குமிடம் கட்டப்பட்டது. வித்துவான் சரவணமுத்து அவர்கள் தமது மனைவியின் ஞாபகார்த்தமாக 1942ம் ஆண்டிலே ஒரு வகுப்பறையை கட்டிக் கொடுத்தார். இவ்வகுப்பறையில் பாடசாலைக்குரிய நூல்நிலையம் அமைக்கப்பட்டது. சகல வசதிகளும் அடங்கிய இரசாயன ஆய்வுசுடம் ஒன்று 1942ல் நிறுவப்பட்டது.

கல்லடி-உப்போடையைச் சேர்ந்த திரு.என்.என்.செல்லத்துரை அவர்கள் தமது அன்பளிப்பாக தென்புறமாக இரண்டு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். எஸ்.எஸ்.சீ. பரீட்சைப் பெறுபேறுகளின் தொடர்ச்சியாக சாதனை படைத்ததன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவானந்த வித்தியாலயம் 01.07.1948ல் 1ம் தர பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. அக்கால கட்டத்தில் வித்தியாலயத்தின் அதிபராக திரு.எஸ்.அம்பலவாணர் அவர்களும் , முகாமையாளராக சுவாமி நடராஜானந்தாஜீ மகராஜ் அவர்களும் கடமையாற்றிமை குறிப்பிடத்தக்கதாகும். சுவாமி விபுலானந்தர் 19.07.1949 ம் திகதி சமாதியடைந்தார். இவருடைய அஸ்தி சிவானந்தா விடுதி வளவினுள் வைத்து சமாதியாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சுவாமி விபுலானந்தர் அவர்களால் உருவாக்கப்பட்ட சுவாமி நடராஜானந்தாஜீ மகாராஜ் அவர்கள் இராமகி~;ணமி~ன் பாடசாலைகளின் முகாமையாளராக 1946ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். எனவே சுவாமி நடராஜானந்தாஜீ அவர்கள் சிவானந்த வித்தியாலயத்தின் முகாமையாளராக இருந்து இவ்வித்தியாலய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விடுதி மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கால்நடையாக ஊர்கள் தோறும் நடந்து சென்று பணத்தை வசுலித்து வந்தார். இவர் மாணவர்கள் சைவப்பண்புகளிலும், ஒழுக்க வளர்ச்சியிலும் கண்ணும் கருத்துமாக இருந்து கட்டிக்காத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசாங்கம் 1960ம் ஆண்டு பாடசாலையை பொறுப்பேற்று தேசியமாக்கியதை தொடர்ந்து எமது பாடசாலையின் வளர்ச்சிக்கட்டத்தில் 2வது கட்டம்ஆரம்பமானது. அரசாங்கம் பொறுப்பேற்கும் போது எமது பாடசாலையில் ஆய்வுகூட வசதிகளோடு பொருந்திய வகுப்பறைகள், சிறந்ததொரு நூலநிலையம், 200க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்க இருக்ககூடிய விடுதி என்பவற்றுடன், உயர்தர கணித, விஞ்ஞான, கலை, வர்த்தக பிரிவுகளில் கல்வி புகட்ட கூடிய பாடசாலையாக விளங்கியது.

திரு.கே.கணபதிப்பிள்ளை அவர்கள் 01.09.1955- 23.05.1969 ஆம் ஆண்டு வரை மிகநிண்டகாலமாக அதிபராக கடமை புரிந்தார். இவர் இவர் அதிபர் வரிசையில் பாராட்டத்தக்கதோர் இடத்தை வகித்தார். வேட்டியும் வாலாமணிச்சட்டையும் என்றும் அணிந்து இருப்பதோடு கம்பீரமான தோற்றமுடையவராக காணப்பட்டார். இவர் மாணவர்களிற்கு முன்மாதிரியாகச் செயற்பட்டார். ஆங்கிலப்பாசையை சரளமாக பேசி மாணவர்களிடையே காருண்ணியமாக நடந்து மாணவர்களை கவர்ந்து கற்றலில் ஈடுபட செய்தவராவார். இவருடைய காலப்பகுதியில் உயிரியல் ஆய்வுகூடம், பாரதி மண்டபம் ஆகியன கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவர் ஒய்வு பெற்றதை தொடர்ந்து திரு.கந்தையா தியாகராஜா அவர்கள் 23.05.1969- 13.11.1977ம் ஆண்டு வரை அதிபராக கடமையாற்றினார். இவருடைய காலகட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பாடசாலைக்கு வளங்கள் கிடைப்பதற்கு காரணகர்த்தாவாகவும் இருந்தார். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அரசியல்வாதியுமான காலஞ்சென்ற திரு.ராஜன் செல்வநாயகம் அவர்களின்ஒதுக்கீட்டு நிதியிலிருந்து தற்போது புனர்நிர்மாணம் செய்து காணப்படும் பாடசாலையின் முன்னால் அமைந்துள்ள மேல்மாடி கட்டிடமும் பௌதீக இரசாயன ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன.

இதனால் விஞ்ஞானத்தறையில் பாரிய வளர்ச்சி கண்டது. இக்காலகட்டத்தில்1975ம் ஆண்டு முதன் முதலாக க.பொ.த.உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். முதலாவது மாணவியாக செல்வி.ச.திலகவதியும், செல்வி.அ.ஹம்சலாவும் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து க.பொ.த.உயர்தர விஞ்ஞான, கணித, வர்த்தக, கலைப்பிரிவுகளிலும் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அன்று தொடக்கம் 25 வருடங்களாக க.பொ.த.உயர்தர வகுப்பில் மாணவிகளும் கல்வி கற்றுவந்தனர். 200ம் ஆண்டு க.பொ.த.உயர்தர வகுப்பில் பெண்கள் கல்வி பயில அனுமதி வழங்குவது தவிர்க்கப்பட்டது. 14.11.1977- 01.07.1981 வரை திரு.வி.சீ.கந்தையா அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இவர் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளிலும் ஆன்மிக ஒழுக்கம்களிலும் மிகுந்த அக்கறை காட்டியதோடு, மாணவர்களுக்கு இலக்கியத்திலும் ஈடுபாட்டை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து 28.07.1978 – 01.071981 வரை திரு.கே.குணரெட்ணம் அவர்கள் அதிபராக கடமையாற்றினார்கள். இவர் அதிபராகக் கடமைபுரிந்த காலத்தில்தான் சிவானந்தா வித்தியாலயம் பொன்விழாக் கண்டது.18.11.1979ம் ஆண்டு பொன்விழா நிகழ்வு நடைபெற்ற வேளையில் தபால் தந்தி தொலைத்தொடர்பு மாண்புமிகு அமைச்சர் கௌரவ டீ.வி.விஜயதுங்க அவர்கள் வருகை தந்து சுவாமி விபுலானந்தரின் ஞாபகார்த்த முத்திரையை வெளியீட்டு வைத்தார். இது வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வாக காணப்பட்டது. அத்தோடு பொன் விழா மலரும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இவர் இடம் மாற்றம் பெற்றுச் சென்றார். அதன் பின்னர் 01.07.1981 -26.8.1981 வரை திரு.எஸ்.பரஞ்சோதி அவர்கள் பதில் அதிபராக கடமையாற்றினார்.இவர் க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்கள் ஓழக்க கட்டுப்பாட்டுடன் கற்று சிறந்த பெறுபேற்றை பெற அடிநாதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கண்டிப்பும், கடமை உணர்வும் மிக்கவராக இவர் காணப்பட்டார். 26.08.1981 -27.07.1982 வரை குறுகிய காலத்திற்கு திரு.எஸ்.மகேஸ்வரன் அவர்கள் கடமையாற்றினார். திரு.எஸ்.மகேஸ்வரன்; அதிபர் அவர்கள் ஒய்வு பெற்றதை தொடர்ந்து 26.071982- 19.07.1984 வரை மீண்டும் திரு.கந்தையா தியாகராஜா அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் (பழைய) ஒன்றுகூடல் மண்டபத்தை அமைப்பதற்கு இராமகி~;ண மி~னிடமிருந்து காணி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ப்பட்டது. இவர் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுச் சென்ற பின்னர் இவருடயை மாணவரான திரு.எம்.செல்வராஜா அவர்கள் 20.07.1984 ல் அதிபராக நியமிக்கப்பட்டு 19.08.1988 வரை கடமையாற்றினார். இவர் மாணவர்களின் கற்றல நடவடிக்கைகளில் ஈடுபட பல ஊக்கங்களை வழங்கினார். கற்பித்தல் முறைகளில் பல மாற்றங்களை புகுத்தினார். இக்காலப்பகுதியிலே ஒன்றுகூடல் பகுதிக்கான 1றூட் 14 பேர்ச்சஸ் விஸ்தீரமான காணி இராமகி~;ணமி~னால் வழங்கப்பட்டதுடன் ஒன்றுகூடல் மண்டபத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. திரு.எம்.செல்வராஜா அவர்கள் தேசிய கல்வி நிறுவனத்திற்கு பதவியுயர்வ பெற்று சென்றதைn தொடர்ந்து.19.08.1988- 31.12.1989 வரை பிரதி அதிபராக இருந்த திரு.கே.பாலச்சந்திரன் அவர்கள் அதிபர் பதவியை பொறுப்பேற்று பாடசாலையை நிருவகித்தார். அவர் அதிபர் பதவியை விட்டு சென்றதை தொடர்ந்து 01.01.1990- 15.01.1990 வரை சிரேஸ்ர எதவி ஆசிரியராக இருந்த திரு.ஏ.பாக்கியமூர்த்தி அவர்களிடம் பாடசாலை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் திரு.கணபதிப்பிள்ளை தியாகராஜா அவர்கள் 15.01.1990- 10.10.1992 வரை அதிபராக கடமையாற்றினார். இவருடைய காலகட்டம் நாட்டிலே இனக்கலவரம் ஏற்பட்ட காலமாகும். ஆக்காலகட்டத்தில் துணிச்சலுடன் காரியாலயக்கடமைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இக்காலகட்டத்தில் பாடசாலைக்கு பின்புறமாக அமைந்துள்ள இரண்டுமாடிக்கட்டிடத் தொகுத்pயின் தளக்கட்டிடம் கட்டப்பட்டது. சரஸ்வதி ஆலயம் அமைக்கப்பட்டது. விடுதிக்கு மதில் கட்டப்பட்டதுடன் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவர் பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து திரு.கே.விஜயரெட்ணம் அவர்கள்10.10.1998- 01.06.1995 வரை அதிபராக பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் பாடசாலைக்கு பின்புறமாக அமைந்த கட்டிடத் தொகுதியின் மேல்மாடி கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டதுடன் பாடசாலைக்கு தென்புறமாக அமைந்துள்ள இருமாடிக்கட்டிட தொகுதிக்கான (நடராஜானந்தா மண்டபம்) அடிக்கல்லும் நடப்பட்டதோடு நவீன மாடி விடுதியும் கட்டப்பட்டது. இந்த நவீன மாடி விடுதியை முன்னால் வர்த்தக வாணிபத்துறை கௌரவ அமைச்சர் திரு.ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்கள் ஜனாதிபதியின் விசேட ஒதுக்கீட்டு நிதியில் இருந்து இந்நவீன விடுதியை 28.06.1993 அன்று அடிக்கல் இட்டு 16.09.1998 ஆண்டு அமைச்சராலேயே திறந்து வைக்கப்பட்டது. இவர் சிவானந்தா வித்தியாலய விடுதியிலிருந்து கல்வி பயின்ற பழைய மாணவன் என்பதும் குறிப்பிடதக்க அம்சமாகும். இவ்விடுதி கிடைப்பதற்கு அக்காலகட்டத்தில் இயங்கிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் குறிப்பிடத்தக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டமை பாரட்ட தக்க அம்சமாகும்.11.05.1994 ல் இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 25.10.1993 அன்று சுவாமி ஜீவானந்தாஜீ அவர்களினால் அதிபர் விடுதிக்கான அடிக்கல் நடப்பட்டு, அதிபர் விடுதி அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

திரு.கே.விஜயரெட்ணம் அவர்கள் பதவி உயர்வு கிடைத்ததைத் தொடர்ந்து திரு.என்.இராஜரெட்ணம் அவர்கள் 01.06.1995- 03.04.1998 வரை அதிபராக கடமையாற்றினார். இவரது காலக்கட்டத்தில் தென்பகுதியில் அமைந்துள்;ள மாடிக்கட்டிடத்தின் 2வது மாடி கட்டப்பட்டு தபால் தந்தி தொலைத்தொடர்பு முன்னால் பிரதி அமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 90’ஒ 25’ நீளமான மண்டகத்தின் முதலாவது மாடி அடைக்கப்பட்டு கிழக்குப் பல்கலைகழகப் பதிவாளர் திரு.சீ.நடராஜா முன்னிலையில் சுவாமி ஜீவானந்தாஜீ மகராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவர் முன்னிலையில் சுவாமி 1998 ஆண்டு பதவி உயர்வு பெற்று சென்று உள்ளார்.

அதன் பின்னர் திரு.இ.பி. ஆனந்தராஜா அவர்கள் 03.04.1998 ஆம் திகதி சிவானந்த வித்தியாலயத்தின் அதிபரானார். இவருடைய காலகட்டத்தில் சிவானந்த வித்தியாலயம் பௌதீக வளர்ச்சியில் பாரிய உயர்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அரசியல் செல்வாக்கும் ஆளணி பலமும், அர்பணிப்பும் அதிகமாக காணப்பட்டமையால் இவரால் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு ஞாபகார்த்தமாக 3வது மாடிக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் கல்வி அமைச்சில் இருந்து பெற்றுத்தந்த ரூபா 7மில்லியன் நிதியலிருந்து பாடசாலைக்கு சுவாமி நடராஜனந்தாஜீ ஞாபகார்த்த நவீன மண்ணடபத்திற்கான அடிக்கல் 12.07.2000 ஆம் ஆண்டு அன்று நடபட்டது. இந்நவீன கலையரங்கம் அமைப்பதற்காக நீர்வழங்கல் வடிகால் அமைப்புக்கு சொந்தமான 1 றூட் விஸ்தீரணமான காணி 02.03.2000 ம் ஆண்டில் சுவீகரிக்கப்பட்டது. இக்காணிணினை மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை பெறுவதில் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பெரும் பங்கு வகித்தது. மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா அவர்கள் விளையாட்டு துறை அமைச்சில் இருந்து பெற்றுத்தந்த பதினேட்டு இலட்சம் ரூபா நிதி உதவியுடன் எமது வித்தியாலய விளையாட்டு மைதானம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு விஸ்தரிப்பு செய்யப்பட்டதுடன் சுற்று மதிலும் கட்டப்பட்டது. இந்நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு அப்போது இருந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பழயை மாணவர் சங்கமும் அதிபருக்குத் தோள் கொடுத்து உதவியமை பாராட்டத்தக்க அம்சமாகும்.

மேலும் பாடசாலையின் முன்புறத்தில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கட்டிடத் தொகுதியானது. “டோபா” திட்ட இணைப்பதிகாரி திரு.ஆர்.சிவானந்தராஜா அவர்களால் சிபாரிசு செய்யப்பட்ட பதின்மூன்று இலட்ச நிதி உதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா அவர்களினால் ஒதுக்கிடு செய்யப்பட்ட 6 இலட்சம் ரூபா நிதியுடனும் கலை அம்சம் பொருந்திய அழகிய தோற்றத்தைத் கொண்ட முகாமைத்துவ நிர்வாகக் கட்டிடத்தொகுதியாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. மேலும் இலண்டன் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவியின் மூலம் சரஸ்வதி ஆலய முன்மண்டபம் அமைக்கப்பட்டது. அத்தோடு கொழும்பு இராமகி~;ணமி~ன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானாந்தாஜீ மகராஜ் அவர்களின் அனுசரனையுடன் ஓமானில் வாழும் திரு.வி.பரமலிங்கம் அவர்கள் வழங்கிய ரூபா 5 இலட்சம் நிதியுதவியிலிருந்து கணனி அலகு ஸ்தாபிக்கப்பட்டது. பொதுக்கல்வித் திட்டம் (பு.நு.P.11) இனு; கிழ் 12 இலட்சம் ரூபா செலவில் நவீன நூலகம் 29.04.2000ல் அடிக்கல் நடப்பட்டு அமைக்கப்பட்டது. 30.11.2001 ல் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் எமது பாடசாலையில் வெளியிடப்பட்டு வந்த சிவானந்தன் சஞ்சிகை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

எமது வித்தியாலயத்தின் ஸ்தாபகரான சுவாமி விபுலானந்தர் அவர்களின் திருவுருவச் சிலையானது வடகிழக்கு மாகாண கல்வி கலாச்சார, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக இருந்த திரு.கே.தியாகராஜா அவர்களின் அரும்பொரும் முயற்சியால் நடப்பட்டது. இதனை பழைய மாணவர் மன்றமே பொறுப்பேற்று இச்சிலையை அமைக்கும் பாரிய பணியை மேற்கொண்டது. இச்சிலையினை “ஜயனி ஸ்ரூடியோ “ உரிமையாளரான திரு.பி.ஜெயந்திரன் அவர்கள் தனது செலவிலே செய்து கொடுத்தார். அதன் பின்னர் திரு.கே.தியாகராஜா அவர்கள் சுவாமி நடராஜானந்தஜீ மகராஜ் அவர்களுக்கும் ஒரு திருவுருவச் சிலையை நிறுவதற்கு ஏற்பாடுகள் செய்தவேளையில் அவர் உயிர்நீத்ததை தொடர்ந்து பழைய மாணவர் மன்றம் அப்பணியை பொறுப்பேற்று நடராஜானந்தாஜீ திருவுருவச்சிலையையும் எமது பாடசாலைக்குள் நிறுவியுள்ளது. இரண்டு திருவுருவச்சிலைகளையும் கல்லடி உப்போடை இராமகிரு~;ண சங்கத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்தஜீ மகராஜ் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

பழைய மாணவர்கள் கனடாவில் வசிக்கும் திரு.கனகரெத்தினம் பாலச்சந்திரன் அவர்கள் ரூபா 65000;ஃஸ்ரீ செலவில் சிறுவர் பூங்கா ஒன்றை ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு அமைத்து தந்தார்.அத்தோடு பாடசாலைக்கு முன்னால் உள்ள மதில் திருத்தப்பட்டதுடன் டெனிஸ் ஆடு தளமும் அமைக்கப்பட்டது. இவ்டெனிஸ் ஆடுகள அமைப்பை இலண்டனில் வசிக்கும் எமது பழைய மாணவரான திரு.கந்தையா பகிரதன் அவர்கள் 10000;ஃஸ்ரீ ரூபா செலவில் அமைத்து தந்தார். இரண்டாம் நிலைக்கல்வி நவீனமயப்படுத்தும் திட்த்தினுடாக எமது பாடசாலையின் கணனி கற்கை நிலையத்திற்கு 20 கணனிகள் கொண்ட தொகுதி உரிய தளபாடங்களுடன் கிடைக்கப்பெற்று 2003.06.16ல் மனிதவள அபிவிருத்தி கல்வி கலாச்சார அமைச்சர் கௌரவ கருணாசேன கொடித்துவக்கு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் கல்வி அமைச்சின் ஒதுக்கீட்டில் ரூபா 7 மில்லியன் செலவில் எமது பாடசாலைக்கு நடராஜானந்தஜீ ஒன்றுகூடல் மண்டபத்தை அமைத்து தந்தார். இவ் ஒன்றுகூடல் மண்டபத்தை வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் 2003.07.18 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. கல்லடியை சேர்ந்த திரு.திருமதி.நாகரெத்தினம் கந்தப்பன் அவர்களின் ஞபாகர்த்தமாக இரண்டனில் வதியும் பொறியியலாளரும் எமது பாடசாலையின் பழைய மாணவருமாகிய எந்திரி.திரு.கந்தப்பன் லோகிதராஜா அவர்கள் 80,000;ஃஸ்ரீ ரூபா பெறுமதியான பச்சை இல்லம் ஒன்றை அமைத்துத் தந்தார். இது 2003.07.08 ம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலைக் கட்டிட முன்றலில் ஸ்ரீ இராமகி~;ண பரமஹம்சரின் முதன்மை சீரடர்களான சுவாமி சிவாநந்தர், சவாமி விஞ்ஞானந்தர் ஆகியோரின் திருவுருவப்படங்கள் 2003.09.10 ல் சுவாமி போதமயானந்தஜீ மகராஜ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. 2004ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரான கௌரவ திரு.த.கனகசபை அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி மூலம் விளையாட்டு மைதான முன்பக்க மதிலுக்கு அத்திவாரம் இடப்பட்டது.அத்திவாரமிடப்பட்ட அம்மதிலானது மட்டக்களப்பு மாவட்ட அராசாங்க அதிபர்திரு.சீ.புண்ணியமூர்த்தி அவர்களினால் கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டின மூலம் பழைய மாணவர் மன்றம் அம்மதிலினைக் கட்டி முடித்தது.

மட்ஃசிவானந்தா வித்தியாலயமும், திருஃகாணேஸ்வரா இந்துக்கல்லூரியும் விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட இராமகி~ணமி~ன் பாடசாலையாக இருந்த காரணத்தால் அப்போது வடக்குகிழக்கு மாகாண கல்விச் செயலாளராக கடமையாற்றிய அமரர் திரு.க.தியாகராஜா அவர்கள் இரண்டு பாடசாலைகளுக்கும் இடையே சினேகபூர்வமான மென்பந்து கிறிக்கட் ஆட்டப்போட்டியை நடத்தலாம் என்ற கருத்தினை இரு பாடசாலைகளுக்கும் இடையில் முன்வைத்தார். அவரின் கருத்தை இருபாடசாலைகளும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக 1993ம் ஆண்டு முதலாவது ஆட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் 1995 ம் ஆண்டு தோல்பந்து கிரிக்கட் ஆட்டமாக மாற்றப்பட்டது. 2007 ம் ஆண்டு 14வது சினேகபூர்வ கிரிக்கட் போட்டியை இருபாடசாலைகளும் நிறைவு செய்துள்ளது.

எமது வித்தியாலயத்தின் தரம் 1 வகுப்பு 200ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதே வருடம் க.பொ.த.உயர்தர வகுப்பிற்கு பெண் மாணவிகள் அனுமதி நிறுத்தப்பட்டது. அதேபோல் கல்லடி- உப்போடை விவேகானந்த மகளீர் வித்தியாலத்தில் தரம் 1ற்கு ஆண்களை அனுமதிக்கும் அனுமதியும் நிறுத்தப்பட்டது. இக்கல்லூரி இரண்டும் வரள வேண்டும் என்னும் நோக்கில் இக்கருத்தினை ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனாந்தஜீ மகராஜ் அவர்கள் முன்வைத்தார்கள். இருபாடசாலைச் சமூகமும் அதை ஏற்றுக்கொண்டது. அதன்பிரகாரம் இன்று 01ல் கல்வி கற்பதற்கு ஆரம்பக் கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர் இல்லாத காரணத்தால் திருமதி.கோ.மகேந்திரன் ஆசிரியை சிறிது காலம் தரம் 1 கல்வி கற்பிக்கும் பொறுப்பை ஏற்று கல்வி புகட்டினார்.13 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

1965ம் ஆண்டு அரச கொள்கையின் படி இல்லாமல் செய்யப்பட்ட ஆங்கில மொழிமூலக்கல்வி மீண்டும் எமது வித்தியாலயத்தில் 2004ல் தரம் 6ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் முதல் தடவையாக ஆங்கிலமொழி மூலத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீடசைக்கு 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோற்றவுள்ளனர்.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் எமது ஆசிரியை குழாத்தில் 35 ஆசிரியர்கள் கொழும்பு இராமகி~;ணமி~ன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தஜீ மகராஜ் இன் தலைமையின் கீழ் இந்தியாவின் வடக்கு, கிழக்கு, தெற்கு , மேற்கு மற்றும் மத்திய பகுதிகளையும் இமயமலை அடிச்சாலையையும் உள்ளடக்கியதான ஆன்மீகக் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். மெது பாடசாலை மாணவர்கள் கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபடாமைக்கு கூடைப்பந்து மைதானம் இல்லாமையைப் போக்கும் முகமாக திரு.பூபாலரெத்தினம் ஹரிகரநாதன் அவர்கள் ஒரு கூடைப்பந்தாட்ட மைதானத்தை அமைக்க விரும்பி காலஞ்சென்ற தமது தந்தையார் அமரர் டகாகடர் பூபாலரெத்தினம் ஞாபகார்த்தமாக அவர்கள் குடும்பத்தார் அணைவரும் சேர்ந்து 12 இலட்சம் ரூபா செலவில் கூடைப்பந்து மைகதானம் ஒன்றை அமைத்து கொடுத்தனர். இம்மைதானம் 17.10.2005ம் திகதி ஸ்ரீமத் சுவாமி ஜவானந்தஜீ மகராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு சிவானந்த வித்தியாலய விடுதி மாணவர்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. கட்டில்கள், அலுமாரிகள், மேசைகள், கதிரைகள் போன்ற அனைத்தும் திருப்திகரமாக காணப்படுகின்றன. சமயலறைகளிலும் சிறந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சிலிருந்து நவீன கற்பித்தல் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் ழுPர் 20 கணனிகள் கொண்ட ஆய்வுகூடம் ,கட்புலு-செவிப்புல சாதன அறை, டிஜிட்டல் போட்;டோ கொப்பி மெசின் போன்ற இன்னோரன்ன உபகரணங்கள் கிடைக்கப்பெற்றது.

முழiழெnயை மட்டக்களப்பு நிறுவனம் கணனிகள் ,ஆரடவi ஆநனயை Pசழதநஉவழச, தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை எமது பாடசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளனர். பொதுக்கல்வித் திட்டம் ஐஐ கீழ் கல்விப்பணிப்பாளராக திரு.எஸ்.எஸ்.மனோகரன் இருந்த காலத்தில் எமது பாடசாலைக்கு நவீன கட்டிட அமைப்பு கொண்ட தளபாடங்களுடனான நூலகம் 2002 ல் கிடைக்கப் பெற்றது.

அவுஸ்திரெலிய பழைய மாணவர் மன்றத்தினர் 25,000 ரூபா செலவில் பாடசாலையின் உள்வாயில் முகப்பில் கீதோபசாரக் காட்சியை அமைத்து கொடுத்தனர். இலண்டன் பழைய மாணவர் மன்றத்தினர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக க.பொ.த சாதாரணப் பரீடசை குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு நடாத்தப்படுகின்றது. சிவானந்த வித்தியாலயமானது 27 பேருடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று 1780 மாணவர்களுடன் காணப்படுகின்றது.

பாடசாலை அழகிய கலையம்சம் பொருந்திய முகப்பு வாயில் ஒன்று அமைக்கப்பட்டு பாடசாலை வரலாற்றுக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளது. இம்முகப்பு வாயிலை 3,30,000;ஃஸ்ரீ ரூபா செலவில் கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை ஞபகார்த்த நம்பிக்கை நிதியத்தின் ஊடாக திரு.திருமதி.டாக்டர்.பாலசுப்பிர மணியம் அவர்கள் அமைத்து கொடுத்தனர்.

1925 ம் ஆண்டில் விதிக்கப்பட்ட சிவானந்தா 1929 ல் 27 மாணவர்களுடனும் 6 ஆசிரியர்களுடனும் முளைவிட்டு காலச் சுழச்சியில் கிளைவிட்டு பரந்து பெருவிருட்சமாகி இன்று 1870 மாணவர்களுடனும் 73 ஆசிரியர்களுடனும் , 10 கல்விசார அணியினருடனும் காணப்பட்டு மாணவர்களை அறிவூட்டி உயர்ந்து நிற்கின்றது. கால மாற்றத்துக்கேற்ப தம்மை ஈடுகொடுத்து மாணவர்களின் கல்வித் தாகத்தை தணிக்கும் எமது கல்லூரி இனிவரும் காலங்களில் இதனிலும் சிறந்த பணியாற்றி நன்மாணக்கர் பலரை உலகுக்களித்து மேலும் உயர்ந்து நி;ற்கும் என்பது திண்ணம். பகவான் ஸ்ரீ இராமகி~;ணரின் அருளாசி என்றும் உறுதுணையாய் நிற்கும் என்பது உறுதியாகும்.

The Fifty Years

Sri ramakirishna mission was founded by swami Vivekananda with the main aim of the total spiritual re awakening of humanity. the two mai ideals of this movement are the total development of the individual in co-ordination with the upliftment of society. The eastern nations which had been under foreign yoke for nearly a century were on the verge of resurgence just at the time when swami Vivekananda visited celon (15.01.1987) co-incidental with the buddhist revival in the siouth spearheaded by Anagariga Dharmapala & the hindu revival in the north sponsored by Sri Arumaga Navalar, visit of swami Vivekananda inspired the organization of Vivekananda societiesall over the Island.One such society was founded in Batticalao and a few schools were managed by the society. Just about this time two philanthropists of kallady uppodai viz:sabapathipillai udaiyar had endowed 5000/= for the establishment of a Hindu English school. On the 10th of April 1925 there was a meeting of distinguished patriots with the purpose of exploring the possbillity of estabilishing one such school. On that occasion the sons of messrs. Kathotkamathamby Udaiyar And Sabapathippillai Udaiyar viz: Sri K.O.Veluppillai & Sri.S.O.Rathnasingam offered the resources of the Rs 5000/= Endowed by their parents & Sri K.O.Velippillai in addition donated 15 acres of land . Swami Vipulananda who was the Chief invitee was entrusted with the estabilishment of this school.

The foundation for Shivananda Vidiyalaya was laid on the 26th of November, 1925 and the school was declared open with due religious obsevervances by swami vipulananda on the 15th of

சிவானந்த வித்தியாலயம் ஐம்பதாண்டுகளிலே…

ஸ்ரீ இராமகி~;ண சங்கம், மனித குலத்தின் பூரண ஆத்மீக வளர்ச்சிக்கென சுவாமி விவேகானந்தரினால் தாபிக்கப்பட்டதொன்றாகும். தனி மனித ஈடேற்றமும் மனித சமூகத்தின் இன்னல்களை களைதலும் ஆகிய இருபெரும் நோக்கங்கள் இவ்வியக்கத்தின் அடிப்படைகளாக அமைந்தன. மேற்கத்திய அரசியல் கலாச்சார த் தாக்கங்களினால் அல்லலுற்ற கிழக்குலக நாடுகள் ஒன்றான இலங்கை தீவிலும், சுவாமி விவேகானந்தரது வருகை (15.01.1897) தேசிய மறுமலர்ச்சிக்குரிய ஏதுவாக அமைந்தது. பௌத்தர்களிடையே அநாகரிக தர்மபால அவர்களது எழுச்சி மிகு தொழிற்பாடுகள் வடக்கே ஆறமுகநாவலரது சைவ பரிபாலன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இசைவாக விவேகானந்தரது வருகையோடு அநேக விவேகானந்த சபைகள் தீவுமுழுவதிலும் உருவாகின . இவ்வாறாக உருவான சபைகளிலே மட்டக்களப்பிலும் இருந்த விவேகானந்த சபை தமது சமய நடவடிக்கைகளுடன் சில பாடசாலைகளையும் நடாத்தி வந்தது. இதே காலத்தில் கல்லடி உப்போடையிலே வாழ்ந்த திரு.கதிர்காமத்தம்பி உடையார், திரு.சாபாபதிப்பிள்ளை உடையார் முதலிய நல்லெண்ணம் படைத்த இரு தனவந்தர்கள் இந்துசமயச் சார்பான கல்விப்பணிக்கேன 5000;ஃஸ்ரீ ரூபா ஒதுக்கி இருந்தனர். 1925ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி கல்லடி உப்போடையிலே ஒர் ஆங்கிலப் பாடசாலையை தாபிக்கும் நோக்குடன் பல பிரமுகர்கள் கூடி ஆலோசனை செய்தனர்.

இச்சந்தர்பத்தில் முறையே திரு.கதிர்காமத்தம்பி உடையார், திரு.சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரது புத்திரர்கள் ஆன திரு.கே.ஒ.வேலுப்பிள்ளை, திரு.எஸ்.ஓ.இரத்தினசிங்கம் ஆகியோர் அவர்களது தந்தையார் விட்டுச்சென்ற 5000;ஃஸ்ரீ ரூபாவை கல்விச் தொண்டுக்கு கொடுத்து உதவினர். அத்துடன் திரு.கே.ஒ.வேலுப்பிள்ளை அவர்கள் 15 ஏக்கர் நிலத்தினையும் மேற்படி இந்து சமய கல்விப்பணிக்கு அன்பளிப்பு செய்தார். அவர்கள் சுவாமி விபுலானந்தரை அழைத்து இப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

சிவானந்த வித்தியாலத்தின் கல்நாட்டு வைபவம் 1925 ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி நடை பெற்றது. பூர்த்தியாக்கப் பட்ட பாடசாலைக் கட்டம் 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி சுவாமி விபுலானந்தரால் சமய சம்பிரதாயப்படி திறந்து வைக்ப்பட்டது.இதனைத்தொடர்ந்து அதே வருடம் ஏப்பரல் மாதம் 22ல் நடைபெற்ற பகிரங்க திறப்பு விழாவிலே அக்கால கிழக்கு மாகாண அரசாங்க அதிபர் கலந்து கொண்டார்கள். துpறந்து வைக்கப்பட்ட பாடசாலை சுவாமி விபுலானந்தரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை வகுப்புக்கள் மே மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை 27 மாணவர்களுடன் ஆரம்பிக்ப்பட்டது. சேர்வுடாப்பிலே முதலிடம் பெற்றவர் கல்லடி உப்போடையை சேர்ந்த திரு.அ.பஞ்சாட்சரம் அவர்களாவார். பாடசாலையினை முதல் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் திருகோணமலையை சேர்ந்த திரு.பாலசுப்பிரமணியம் என்பவராவார். அவரைத் தொடர்ந்து திரு.செந்தில்நாதன், திரு.தியாகராஜா ஆகியோர் கல்வி புகட்டினர்.ஆரம்ப கால அதிபர்களாக திரு.ஏ.பாலசுப்பிரமணியம், திரு.இராமச்சந்திரன், திரு.கதிரவேலுப்பிள்ளை, திரு.மேனன் .பி.ஏ என்போர் அமர்ந்து தொண்டாற்றினர்.

பாடசாலை சுவாமி விபுலானந்தர் வசம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் அரசினர் அங்கீகாரம் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் இதனை பராமரிக்கும் பொறுப்பு அவ்வூரவரிடமே விடப்பட்டது.அதற்கு பொறுப்பாக ஐந்து பேரை கொண்ட நிர்வாகசபை இயங்கியது. இச்சபையில் திருவாளர்.க.உ.வேலுப்பிள்ளை, நொ.சி.செல்லத்துரை, நா.சீனித்தம்பி, நொ.க.நல்லதம்பி, தோ. சுந்திரசேகரம், ச.உ.இரத்தினசிங்கம் ஆகியோர் கடமையாற்றினர். க.உ.வேலுப்பிள்ளை அவர்கள் பொருளாளராக கடமையாற்றினார் . இச்சபையினர் போதிய நிதியுதவியை அளித்ததுடன் பாடசாலைக்கு மாணவர்களை வரும்படி ஊக்கப்படுத்தியும், சங்க துறவிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்தும் ஊக்கமளித்தனர். இவர்களது விடாமுயற்சியிலும் பாடசாலை வளர்ச்சியடையத் தொடங்கியது. இது சிவானந்த வித்தியாலயத்தின் வளர்ச்சியிலே குறிப்பிடத்தக்கதொரு கட்டமாகும்.

1929ம ஆண்டு ணுூலை 14ல் இலங்கை இராமகி~;ண சங்கமானது அரச அங்கிகாரம் பெற்றது. 1931ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி பாடசாலையிலே நடைபெற்ற மதிப்பீட்டை தொடர்ந்து சிவானந்த வித்தியாலயம் இராமகி~;ண சங்கத்தின் அரச நனடகொடை பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. இவ்Nவுளை இந்தியாவை சேர்ந்த பீ.இராமசந்திரன் (எம்.ஏ) அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இராமகி~;ண சங்க பாடசாலைகளின் முதலாவது முகாமையாளராகவும் , தலைவராகவும் சுவாமி அலினாசானந்த கடமையாற்றினார்.இவரைத் தொடர்ந்து சுவாமி சுந்தரானந்தா முகாமையாளராக கடமையாற்றினார். 1930ம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் இராமகி~;ண சங்க பாடசாலைகளின் முகாமையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் சில காலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே தமிழ்ப் பேராசியராகக் கடமை ஏற்றமையால் சுவாமி அவர்கள் தென்இந்தியாவுக்கு செல்லவேண்டி நேர்ந்தது. தொடர்ந்து 1933ம் ஆண்டிலிருந்து இராமகி~;ண சங்க பாடசாலைகளின் முகாமையாளராகவும் , சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராகவும் சுவாமி விபுலானந்தர் பணிபுரிந்தார்கள். இக்காலகட்டத்திலே வித்தியாலயத்தின் வளர்ச்சி துரிதகதியில் வளர்ச்சி அடைந்தது.

1933 ம் ஆண்டு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இலங்கையிலே நடைபெறுகின்ற சங்கத்தின் ஆக்கவேலைகளை நேரடியாக பார்த்து தமக்கு அறிவிக்கும் படி சுவாமி சிவானந்தர் அவர்கள் ஸ்ரீ இராமகி~;ண பரம கம்~ரது நேரடிச் சீடர்களுள் ஒருவரும், தமது சகோதர சந்நியாசியுமான சுவாமி விஞ்ஞானந்த அவர்களை இலங்கைக்கு அனுப்பியிருந்தார். தமக்கு சுவாமி விவேகானந்தரளித்த இலங்கைத் திருப்பணி நன்முறையிலே நடைபெறவேண்டும் என்று சுவாமி சிவானந்தர் அவர்கள் பேரவா கொண்டு இருந்தமையை விஞ்ஞானானந்தர் உணர்ந்தார். இதனால் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்ற சுவாமி விஞ்ஞானானந்தர் குறிப்பாக சிவானந்த வித்தியாலயத்திற்கு 1933ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி வருகை தந்தார். பரமகம்~ரது நேரடி சீடர்களுள் இவர் ஒருத்தரே எமது வித்தியாலயத்திற்கு தரிசனம் தந்தவராவார். இவர் இங்கு தங்கியிருந்து பாடசாலை வளரவேண்டும் எனத் தனது நல்லாசியை கூறிச்சென்றார். இவருடைய வருகையைத் தொடர்ந்தே பாடசாலை துரிதமாகவும் சிறப்பாகவும் வளர ஆரம்பித்தது என்று சுவாமி நடராஜனந்தா அவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம். சுவாமி விஞ்ஞானந்தரது வருகையின் ஞாபகார்த்தமாக 1937 ல் விஞ்ஞானானந்த விஞ்ஞான ஆய்வுகூடம் பாடசாலையில் நிறுவப்பட்டது.

ஆரம்பத்திலே பாடசாலைக்கென ஒரு பிரதான மண்டபம் மட்டுமே இருந்தது. விடுதி இருக்கவில்லை. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்குவதற்கு திரு.க.உ.வேலுப்பிள்ளை அவர்கள் தமது வீடுகளிலொன்றை கொடுத்து உதவினார். இதுவே பாடசாலையின் முதல் விடுதியாகும். தொடர்ந்து சித்திர கூடம் என சுவாமிகள் அழைத்தும் மரப்பலகையால் அமைக்கப்பட்டதுமான ஒரு விடுதி சிவபுரிக்கு அருகாமையில் 1936ம் ஆண்டு நிறுவப்பட்டது. பாடசாலை எல்லை கடந்து காடுகள் சூழ விபலானந்தர் அமைத்த இவ் இல்லம் அவரது மனதிலே இராமபிரான் கங்கையை கடந்து வனத்தில் அமைத்த பர்ணசாலையின் சுழலை நினைவுபடுத்தினாற் போலும் அதற்கு சித்திர கூடம் என நாமம் சூட்டினார். இதனைத் தொடர்ந்து கமலாலயம் என்றும் வீடுதியை அமைத்தார். பின்னர் கல்லடி உப்போடையை சேர்ந்த திரு.கே.கணபதிப்பிள்ளை அவர்கள் 1941ம் ஆண்டு விடுதிக்கென ஒரு கட்டிடத்தை அன்பளிப்பு செய்தார். அது இரத்தினாலயம் என்னும் பெயர் பெற்றது.

பாடசாலை கட்டிடங்களிலே கிழக்கு முகமாக உள்ள வகுப்பறைகள் இரண்டு ம் ஸ்ரீ இராமகி~;ண நூற்றாண்டு ஞாபகார்த்தமாக சேர்.கந்தையா வைத்தியநாதன் அவர்களால் 1937ம் ஆண்டு பெ;பரவரி 7ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமதி ஏ.வித்துவான் சரவணமுத்தன் அவர்கள் 1942ம் ஆண்டிலே பாடசாலையில் ஒருவகுப்பறையை கட்டுவதற்குரிய பொருளுதவியை அளித்தனர். இவ்வகுப்பறையில் பாடசாலைக்குரிய நூல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இயங்கிவருகிறது. மேலும் சகல வசதிகள் அடங்கிய இரசாயன ஆய்வுகூடம் ஒன்றும் 1942ல் நிறுவப்பட்டது. கல்லடி உப்போடையை சேர்ந்த திருமதி.என்.எஸ்.செல்லத்துரை அவர்கள் தெனபுறமாவுள்ள வகுப்பறைகள் இரண்டை 1946ம் ஆண்டு கட்டிக்கொடுத்தார்.

சிவானந்திய வித்தியாலய வராலாற்றிலே மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் அதன் துரித வளர்ச்சியாகும் . இதற்கு இங்கு அளிக்கப்பட்ட கல்வி வகை, கற்பிக்கப்பட்ட முறை, ஆசிரியர்களின் தியாக சிந்தனை, பாடசாலை அமைந்த சூழல், நல்லெண்ணம் படைத்தாரது ஒத்துழைப்பு, சுவாமி சிவானந்தரது அருள், தொடர்ந்து வந்த சந்னியாசிகளது ஆசிர்வாதம் என்பன காரணங்களாகும்.

இப்பாடசாலையிலே எமது பாரம்பரிய சமய கலாச்சார அடிப்படையில், முற்போக்கான கலை, ஆங்கில,விஞ்ஞானக் கல்வி ஊட்டப்பட்டு வந்துள்ளது. ஸ்ரீ இராமகி~;ண சங்கத்தினுடைய அடிப்படை சமய சமரச சிந்தனைகளாக, அகன்ற சமூக நோக்கு, சாதிபேதத்திற்கு அப்பாற்பட்ட உயரிய சிந்தனை, தொழில் மகத்துவ நோக்கு ஆகியவற்றின் அடிப்படையிலே புதியதொரு சமூகம் ஒன்று சிவானந்த வித்தியாலயத்திலே உருவாகியது. இங்கு மூத்தோரை அண்ணன் என்றும் இளையோரை தம்பி என்னும் பழக்கத்தில் இருந்தது. தேசியமும் இங்கு பேணப்பட்டது. இந்திய சுதேசிய பிரதிபலிப்புகளை இங்கே காணமுடிந்தது. ஆனால் பாடசாலை மொழ, சமய, சாதி குரோதத்தினை எவரும் கண்டதில்லை விவேகானந்தரது மான~pகக்பற்று, சகோதரப்பற்று என்பன பரந்த அளவில் செறிந்து காணப்பட்டது. சிவானந்த வித்தியால அனாதை இல்லம் “ மாணவரில்லம்” என்றே அழைக்கப்பட்டது. இங்கு துறவிகளோடு வாழ்நத பணம் படைத்த மாணவர்களும் அனாதை மாணவர்களும் எத்தகைய வேறுபாடுமின்றி சமமாக நடத்தப்பெற்றார்கள். மனிதவர்க்கத்ததிற்கு ஆற்நும்சேவையே இறைவனுக்கு ஆற்றும் சிறந்த சேவை என்னும் அடிப்படையிலே சகலரும் இன்றும் நடாத்தப்படுகிறார்கள். பலதரப்பட்ட மாறுபடும் சூழலிலே தம்;மை இசைவாக்கிக் கொள்வதற்கு வேண்டிய பயிற்சியும் முதலில் இருந்தே இங்கு அளிக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய உயரிய தன்மைகளோடு 1929ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பெற்ற சிவானந்த வித்தியாலயம் 1948 ம் ஆண்டில் இலங்கை தீவுலும் உள்ள ஏனைய உயர்தரப்பாடசாலைகளோடு சமஅந்தஸ்து பெற்ற முதலாவது முதலாந்தரப் பாடசாலையாக அரச அங்கிகாரம் பெற்றது.

எமது மாணவர்கள் தோற்றிய முதலாவது பகிரங்க பரீட்சை 1934ம் ஆண்டு நடைபெற்ற யூனியர் தராதர பரீட்சையாகும். இதில் தோற்றியவர்களுள் நால்வர் சித்தி எய்தினர். அவர்கள் முறையே ஒய்வு பெற்ற உதவி சுங்கவரி சேகரிப்பாளரும் தற்போதை நட்டத்தரணியுமான திரு.கே.பாக்கியரெட்ணம் , ஒய்வு பெற்ற பரீட்சை உதவி ஆணையாளர் திர.வி.சதாசிவம், திரு.என்.கந்தசாமி, திரு.கார்த்திகேசு என்பவராவார். மிகவும் கஸ்டமான சூழ்நிலையிலும் சிறந்த பரீட்சை பெறுபேறுகளை பெறக்கூடியதாகவும் ஸ்தாபகரோடு நினறுழைத்த ஆசிரியர்களுள் திரு.மேனன், திரு.வீ.நல்லையா, திரு.கே கந்தசாமி, திரு.வீ.சுப்பிரமணியப்பிள்ளை, திர.கே.சிதம்பரப்பிள்ளை ( பிற்காலத்தில் ஸ்ரீமத் சுவாமி நடராஜனந்தா ) திரு.வீ.தம்பிராசா, திர.வீ.முருகுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இப்பேர்ப்பட்ட நற்பண்பும் தியாக சிந்தனைகளும் உடைய ஆசிரியர்களால் பேணிவளர்க்கப்பட்ட இவ்வித்தியாலயம் ஒரு நல்வித்து எனபதாலும் காலஒட்டத்திலே ஒரு பெரிய விருட்சமாக வளர்ந்து இக்குறுகிய ஐம்பது ஆண்டு காலகட்டத்திலே வளர்ந்து ஒரு தேசிய தாபனமாக வளர்ந்து 6ம் வகுப்புக்கு மேல் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை யும் ஐம்பதுற்கு மேற்பட்ட திறமையான ஆசிரியர்களையும் கொண்டு விஞ்ஞான, கணித, வர்த்தக, கலை ஆகிய துறைகளில் உயர்தர கல்விவசதிகளுடன் சாதி மத பேதம்; இன்றி சகலருக்கும் கல்வி வழங்குகிறது. தற்போது பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்று உள்ளபோதிலும் எமது பாடசாலை தாபகருடையதும், அதற்கு உதவி செய்தவர்களதும் இராமகி~;ண சங்கத்தினதும் ஒத்துழைப்பையும் நல்லாசியையும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றது.

1960ம் ஆண்டில் அரசாங்கம் எமது பாடசாலையை பொறுப்பெற்ற போது ஆய்வுகூடவசதிகளோடு கூடிய வகுப்பறைகள் சிறந்ததொரு வாசிகசாலை, நூற்றுக்கு அதிகமானோர் தங்கியிருந்த வசதியுள்ள விடுதிசாலை எனபனவற்றுடன் உயர்தர மட்டத்திலே கணித, விஞ்ஞான, வர்த்தக, கலை பிரிவுகளிற் கல்வி புகட்டத்தற்க வசதிகளை கொண்ட தாபனமாக இப்பாடசாலை விளங்கியது. தொடர்ந்து அந்த அரசாங்கத்தினதும் , அதன் கல்வி அதிகாரிகளினதும் உதவி எக்காலமும் பெரிய அளவில் கிடைக்கப்பட்டது. இப்பாடசாலையின் இலட்சியத்தையும் , நோக்கத்தையும் உணர்ந்த அதிகாரிகள் இதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினர். பாடசாலைக்கட்டிங்கள் பெரிய அளவில் நீர்மானிக்கபட்டன. அவற்றுள்ளே பாராளுமன்ற மாவட்ட அரசில் அதிகாரியான திரு.இராஜன் செல்வநாயகம் அவர்கள் இருந்த காலத்தில் நிர்மானிக்கப்பட்ட இரண்டு மேல்மாடிக்கட்டிடங்கள் குறிப்பிடத்தக்கன. இதுகட்டிட வளர்ச்சியிலே இப்பாடசாலையிற் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். அண்மையில் வீசிய சூறாவெளியினால் பெருமளவில் பாதிக்கபட்ட இத்தாபனத்தை புனருத்தானம் செய்வதில் மிகவும் துரிதமான உதிகளை அரசினர் ;செய்தனர். வேண்டிய கட்டிடப் பொருட்கள், பண உதவிகள் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக எமது பாடசாலைக்கு கிடைத்தன. இதனால் எமது பாடசாலை நடவடிக்கைகள் சூறாவெளியை தொடர்ந்து மீண்டும் எமது பாடசாலை நடைபெறக்கூடியதாக இருந்தது. வளர்ந்து வரும் எமது தாபனவிருத்திக்குரிய பெரும் திட்டம்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அறிகுறிகளும் சூழலும் உருவாகின.

ஆரசியல் சார்பற்ற பரந்த தேசிய நோக்குடையதும், சமத்துவத்தின் அடிப்படையிலே இயங்குவதும், தேசிய ஒருமைப்பாட்டை மையமாக கொண்டதுமான, சகல சமூகத்தவராலும் ஏற்றுபடக்கூடிய இத்தாபனத்திலே சமய சமரசம் நிலவுவதனாலும், விஞ்ஞான நோக்குடைய கல்வி, ஆத்மீக அத்திவாரத்திலே வழங்கப்படுவதாலும், சமநிலைக்குரிய கல்வி புகட்டுவதினாலும் எல்லோரது நல்லெண்ணம் இத்தாபனத்திற்கு இருப்பதனாலும் இத்தாபனம் பல காலம் தொடர்ந்து சேவை செய்யும் என்பது எமது நம்பிக்கை. இதற்கு இறைவனதும் குருதேவரதும் அருள் என்றும் உண்டு.

BT / Shivananda Vidyalaya National School
Kallady Uppodai, Batticaloa
shivanandavid@gmail.com
0652222379, 0652226352
Shivananda Vidyalaya © All rights reserved. Sponsored by Sivam Velupillai (Kallady Uppodai / Canada)
Design & developed by NSystemNetworks